இ-ட்ரெயின் கல்லூரியின் கல்விக் கருத்தரங்கம் நாளை நடைபெறுகின்றது

Want create site? Find Free WordPress Themes and plugins.
பெட்டாலிங் ஜெயாவிலுள்ள இ-ட்ரெயின் கல்லூரி (ETRAIN COLLEGE)இந்திய மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கம் ஒன்றை நாளை ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 20ஆம் தேதி காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தலைநகர் துன் சம்பந்தன் மாளிகையிலுள்ள சோமா அரங்கத்தில் நடத்துகின்றது.“கல்வி : இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான பாதை” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சரும், ம.இ.காவின் தேசிய உதவித் தலைவருமான டத்தோ எம்.சரவணன் கலந்து கொள்கின்றார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெற விரும்பும் மாணவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்.மாணவர்களுக்கு சிறப்பு டிப்ளமா பயிற்சிகள்இ-ட்ரெயின் கல்லூரி எஸ்பிஎம் முடித்த மாணவர்களுக்காக சிறப்பு டிப்ளமா தேர்ச்சி கொண்ட பயிற்சிகளையும் வழங்குகின்றது.கட்டிடக் கட்டுமான நிர்வாகத் துறை, சுகாதார நிர்வாகத்தில் பாதுகாப்பு போன்ற துறைகளில் டிப்ளமா  பயிற்சிகளையும் இந்தக் கல்லூரி வழங்குகின்றது.தற்போது மிகவும் அதிகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் கல்வித் தேர்ச்சி துறைகளாக இந்த டிப்ளமா தகுதிகள் திகழ்கின்றன.
இ-ட்ரெயின் கல்லூரியில் டிப்ளமா பயிற்சியை மேற்கொள்வதற்கு மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வில் 3 கிரெடிட் தேர்ச்சிகளைப் பெற்றிருக்க வேண்டும். அந்த 3 கிரெடிட் தேர்ச்சிகளில் தேசிய மொழியும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு விஞ்ஞானப் பாடத்திலும் கிரெடிட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இந்திய மாணவர்களுக்கு புதிய துறைகளில் பயிற்சிகள் வழங்க வேண்டும் கல்வித் துறையில் இந்திய சமுதாயம் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு,தகுதி வாய்ந்த இந்திய மாணவர்களுக்கு மேற்கண்ட துறைகளில் உபகாரச் சம்பளங்களும் வழங்கப்படுகின்றன என்று இ-ட்ரெயின் கல்லூரியின் ஆலோசகரும் பிரபல பொதுநல சேவையாளருமான டாக்டர் என்.ஜி.பாஸ்கரன் (படம்) தெரிவித்தார்.
மேற்கூறப்பட்ட இரண்டு வருட டிப்ளமா பயிற்சியை முடித்தவர்கள் ஏறத்தாழ 2,000மலேசிய ரிங்கிட் மாத வருமானத்தை சுலபமாகப் பெறலாம் என்றும் சிறந்த, தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, அவர்களின் டிப்ளமா பயிற்சிக் காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கித் தருவதிலும் இ-ட்ரெயின்  கல்லூரி முயற்சிகள் எடுத்து உதவி செய்யும் என்றும் டாக்டர் பாஸ்கரன் கூறினார்.நாளை நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்வதிலும், மேற்கண்ட டிப்ளமா தேர்ச்சிகளில் கல்வி பயிலவும் ஆர்வமுள்ள மாணவர்கள் மேல்விவரங்களுக்கு கல்லூரியின் அதிகாரிகளை கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்:03 – 78757512./011 -23302673
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author