மக்களின் நன்மதிப்பை பெற்ற டி.வி.எஸ் முதலிடம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

ந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்ற தமிழக நிறுவனங்களில் டி.வி.எஸ் முதலிடத்தைப் பெறுகிறது. சென்னையைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான எம்.ஆர்.எப் 139-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

இந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலை டி.ஆர்.ஏ வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டு ஆயிரம் நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 30 நிறுவனங்கள் இடம்பெற்றன. பெரும்பாலானாவை சென்னையைச் சேர்ந்த நிறுவனங்கள். இந்திய அளவில் டி.வி.எஸ் நிறுவனம் 34-வது இடத்தைப் பிடித்துள்ளது.

நெல்லையைச் சேர்ந்த டி.வி. சுந்தரம் அய்யங்கரால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது இந்தியாவின் மூன்றாவது பெரிய இரு சக்கர உற்பத்தி வாகன நிறுவனம்.

ஆண்டுக்கு 30 லட்சம் இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. வெளிநாட்டுக்கு அதிகளவில் இரு சக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் இந்திய அளவில் டி.வி.எஸ்-க்கு இரண்டாவது இடம். சுமார் 60 நாடுகளுக்கு இரு சக்கர வாகனங்களை இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. டி.வி.எஸ் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் வேணு ஸ்ரீநிவாசன்.

சென்னையைச் சேர்ந்த எம்.ஆர்.எப் நிறுவனம் பட்டியலில் 139-வது இடத்தை பிடித்துள்ளது. டயர் உற்பத்தி நிறுவனங்கள் வரிசையில் அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பெறுகிறது. கடந்த 1946-ம் ஆண்டு மேமன் மாப்பிள்ளை என்பவரால் திருவெற்றியூரில் தோற்றுவிக்கப்பட்ட நிறுவனம். எம்.ஆர்.எப் நிறுவனம் தான் அமெரிக்கா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டயர் ஏற்றுமதி செய்த முதல் இந்திய நிறுவனமும் கூட. தற்போது இதன் தலைவர் கே.எம். மேமன். கார் உற்பத்தியில் ஈடுபடும் நிசான் நிறுவனம் 161-வது இடத்தைப் பெற்றுள்ளது. மெடிமிக்ஸ் பிராண்டுக்கு 223-வது இடம் கிடைத்துள்ளது. வி.பி.சித்தன் என்பவரால் தொடங்கப்பட்ட சோலயில் நிறுவனத்தின் தயாரிப்பு இது. மெடிமிக்ஸ், கியூட்டிகுரா, கிருஷ்ணா துளசி உள்ளிட்ட ஆயுர்வேத பொருட்கள், சோப்புகளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. ஆயுர்வேத பிரிவில் மெடிமிக்ஸ் பிராண்ட் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அகில இந்திய அளவில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனங்களில் ‘கெவின் கேர் ‘ நுகர்பொருள் நிறுவனம் 245-வது இடத்தைப் பெற்றுள்ளது. சிக் ஷாம்பு, மீரா சீயக்காய் போன்ற இதன் தயாரிப்புகள் பிரசித்தி பெற்றவை. கடலூரைச் சேர்ந்த சி.கே. ரங்கநாதனால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் ஹிந்துஸ்தான் லீவர் புரோக்டர் அண்டு கேம்பிள் போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது. ‘ஆச்சி மசலா’ அகில இந்திய அளவில் 289-வது இடத்தைப் பிடித்துள்ளது. தூத்தூக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த பத்மசிங் ஐசக் என்பவரால் கடந்த 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இது. குறுகிய காலத்தில் இந்திய மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளது. ‘ப்ரீத்தி அப்லையன்ஸஸ்’ நிறுவனத்துக்கு 357-வது இடம் கிடைத்துள்ளது. டி.டி. வரதராஜன் இதன் மேலாண் இயக்குனர். கடந்த 1978-ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. தலைமையகம் சென்னையில் அமைந்துள்ளது.

ஆர்.எம்.கே.வி 413-வது இடத்தைப் பெறுகிறது. சக்தி மசலா 445-வது இடத்தில் உள்ளது. போத்தீஸ் 459, வெல்டெக் பல்கலை 464, ஹிந்து 522, பாவான்டோ 537, ராம்ராஜ் காட்டன் 563-வது இடங்களைப் பெற்றுள்ளன. கடந்த முறை 819-வது இடத்தில் இருந்த ஹிந்து இந்த முறை 297 இடங்கள் முன்னேறியுள்ளது. நண்டு பிராண்ட் லுங்கிக்கு 908-வது இடம் கிடைத்துள்ளது.

அகில இந்திய அளவில் சாம்சங் 17-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. சோனி இரண்டாவது இடத்தைப் பெறுகிறது. எல்.ஜி, ஆப்பிள், டாடா, ஹோண்டா, ஆப்பிள், மாருதி சுசூகி, டெல், லெனோவா, பஜாஜ், ஹெவ்லெட் பெக்கார்ட், பாட்டா,நோக்கியா, பதாஞ்சலி, ஏர்டெல், பிலிப்ஸ், எல்ஐசி, ரிலையன்ஸ் ஜியோ, லக்ஸ் பிராண்டுகள் முதல் 20 இடத்துக்குள் வருகின்றன.

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author