அதிரை கீழத்தெருவில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளை முயற்சி!

அதிரையில் கடந்த சில மாதங்களாக திருட்டு சம்பவங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதிரை கீழத்தெரு, ஹோண்டா பைக் ஷோரூம் அருகே உள்ள ஒரு வீட்டிற்குள் நேற்று இரவு திருடர்கள் நுழைந்து கொள்ளையடிக்க முற்பட்டனர். அப்போது சுதாரித்துக்கொண்ட அந்த வீட்டினர் அக்கம்பக்கத்தில் உள்ள இளைஞர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர். இதையடுத்து அந்த வீட்டின் முன்னர் ஏராளமான இளைஞர்கள் திரண்டதை உணர்ந்துகொண்ட திருடர்கள் வீட்டில் எந்த பொருளையும் எடுக்காமல் வேறு பக்கமாக ஏறி குதித்து தப்பி சென்று விட்டனர். அதிரையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து திருட்டு சம்பவங்களும் திருட்டு முயற்சி அரங்கேறி வருவது போதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Close