ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் பேராசிரியர் மாலிக் பெரோஸ் கான் மாநில தலைமை தேர்தல் ஆணையராக நியமனம்..!

மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் தற்போது பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். கோயம்பேட்டில் உள்ள மாநில தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தற்போது பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட கலெக்டராகவும் பொறுப்பு வகித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தான் இவர் ஓய்வு பெற்றிருக்கிறார்.

இவர் ஒரு கன்சோல்டு ஐஏஎஸ், அதாவது பதவி உயர்வு மூலம் ஐஏஎஸ் பதவி பெற்றிருக்கிறார். தற்போது இவரை மாநில தேர்தல் ஆணையராக தமிழக அரசு நியமித்துள்ளது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராக இவர் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Close