சீமை கருவேல மரங்கள் இல்லா மாவட்டமாகும் தஞ்சை!

Want create site? Find Free WordPress Themes and plugins.

தஞ்சை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருபுவனம் ஆகிய இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றதை கலெக்டர் அண்ணாதுரை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

ஐகோர்ட்டு உத்தரவுபடி தஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலக வளாகங்கள், புறம்போக்கு நிலங்கள், ஏரி, குளங்கள், ஊரணிகள் போன்ற இடங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டுவிட்டன. தற்போது தனியார் நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலமாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு படிப்படியாக சீமைக்கருவேல மரங்கள் வேரோடு அழிக்கும் பணியில் மக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

83 பொக்லின் எந்திரங்கள்

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் இணைந்து மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய, கிராம ஊராட்சிகள் ஆகிய பகுதிகளில் ஒட்டு மொத்தமாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 83 பொக்லின் எந்திரங்களும், 42 ஆயிரத்து 672 தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு, சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அழிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்றது. சீமைக்கருவேல மரங்கள் வேரோடு அழிக்கப்படுவதால், நீர் ஆதாரத்தை பாதுகாக்க முடியும். சீமைக்கருவேல மரங்கள் இருந்த இடத்தில் மற்ற மரங்களை வளர்க்கவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author