அதிரையில் சிறப்பாக துவங்கிய TNTJ வின் முஹம்மது ரசூலுல்லாஹ் மாநாடு (நேரடி ரிப்போர்ட்)

கடந்த ஒரு ஆண்டாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக அந்தந்த மாவட்ட வாரியாக முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற பெயரில் மாபெரும் மார்க்க பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிராம்பட்டினத்தில் இந்த மாநாடு இன்று ஏப்ரல்  9 ஆம் தேதியன்று மாலை 4:30 மணியளவில் துவங்கியது.

இதில் TNTJ நிறுவனர் பி.ஜெய்னுல் ஆப்தீன், பொதுசெயலாளர் முஹம்மது யூசுப், பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். இதற்காக அதிரை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியின் பின்புறமாக மிகப்பெரிய மைதானம் தயார் செய்யப்பட்டு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

படங்கள் மற்றும் தகவல்: களத்திலிருந்து முஹம்மத்

 

Close