முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாட்டினால் மக்கள் கடலில் மூழ்கிய அதிரை! (புகைப்பட தொகுப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

கடந்த ஒரு ஆண்டாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக அந்தந்த மாவட்ட வாரியாக முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற பெயரில் மாபெரும் மார்க்க பிரச்சார நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிராம்பட்டினத்தில் இந்த மாநாடு இன்று ஏப்ரல்  9 ஆம் தேதியன்று மாலை 4:30 மணியளவில் துவங்கியது.

இதில் TNTJ நிறுவனர் பி.ஜெய்னுல் ஆப்தீன், பொதுசெயலாளர் முஹம்மது யூசுப், பேச்சாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இதற்காக அதிரை ஈ.சி.ஆர் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியின் பின்புறமாக மிகப்பெரிய மைதானம் தயார் செய்யப்பட்டு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வேண்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். இதில் அதிரையை சேர்ந்த ஆண்களும் பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இந்த மாநாட்டிற்கான ஏற்பாட்டை, TNTJ வினர் வெகுசிறப்பாக செய்திருந்தனர். அதிரை பிறையில் துவக்கம் முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான நேயர்கள் பார்வையிட்டனர்.

படங்கள் மற்றும் தகவல்: களத்திலிருந்து முஹம்மத், சாலிஹ் அர்ஷத், இர்ஷாத் அஹமது

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author