அதிரை மதுக்கடையில் அலைமோதிய குடிமகன்கள், போக்குவரத்து பாதிப்பால் கூட்டத்தை விலக்கிய போலீசார் (படங்கள் இணைப்பு)

நாடு முழுவதும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு உட்பட்ட மதுக்கடைகள் அகற்றப்பட்டன. அந்த வகையில் அதிரை ECR சாலையை ஒட்டி அமைந்துள்ள 3 மதுக்கடைகளும் மூடப்பட்டன.  இதன் காரணமாக ஏராளமான குடிமகன்கள் அதிரை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள மதுக்கடைக்கு வருகை தர தொடங்கியுள்ளனர். இன்றைய தினம் வழக்கத்திற்கு அதிகமாக அந்த மதுக்கடையில், குடிமகன்கள் கூட்டம் அதிகரித்ததால் சாலை வரை நீண்டு சென்றது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் குடிமகன்களை விலக்கி சென்றனர்.

மதுவால் விபத்துகள் ஏற்படுவதை ஒப்புக்கொண்ட நீதிமன்றம் அது, நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டிருப்பது எதன் அடிப்படையில் என்று புரியவில்லை.  நாள்தோறும் அயிரக்கணக்கான இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்லும் இந்த முக்கிய சாலையில், இமாம் ஷாபி ஆண்கள் பள்ளி, இமாம் ஷாபி பெண்கள் பள்ளி, ஷிபா மருத்துவமனை, கிராணி விளையாட்டு மைதானம், லாவண்யா திருமண மண்டபம், கதீஜா திருமண மண்டபம், அதிரை மின்சார வாரியம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் தளங்களின் அருகாமையில் உள்ள இந்த மதுக்கடையின் காரணமாக நாள்தோறும் ஏராளமான சாமானிய மக்கள் தொடர் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கையையும்,  மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்பதே இங்குள்ள மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Close