TNTJ திமுக-விற்கு ஆதரவு அளித்தது ஏன்? உண்மையும்! பின்னனியும்!

Want create site? Find Free WordPress Themes and plugins.
இந்திய நாட்டை யார் ஆள்வது என்பதைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 24 ஆம் தேதியன்று நடக்க உள்ளது.
இத்தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமராக்க கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டு ஊடகங்களை விலைக்கு வாங்கி தனக்கு ஆதரவான நிலையை உருவாக்க முயற்சிக்கிறது.
மறுபுறம் காங்கிரசும் மாநிலக் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன.
காங்கிரசோ மாநிலக் கட்சிகளின் கூட்டனியோ ஆட்சியமைத்தால் நமக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் பாஜக ஆட்சியமைத்தால் முஸ்லிம்களின் மதஉரிமைக்கும், பள்ளிவாசல்களுக்கும், முஸ்லிம்களின் உயிர்களுக்கும் உடமைகளுக்கும், முஸ்லிம் பெண்களின் மானத்துக்கும் மாபெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை மட்டும் காரணமாகக் கொண்டுதான் முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும்.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்கள் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வதையும், முஸ்லிம்கள் மரணிக்கும் போது இஸ்லாமிய சட்டத்தின் படி சொத்துக்களைப் பிரித்துக் கொள்வதையும் இந்திய அரசியல் சட்டம் அனுமதித்து உள்ளது.
பாஜக தனது தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்று சொல்லியுள்ளது. அனைத்து மதத்தவர்களும் இந்து முறைப்படி திருமணம் சொத்து பிரிவினை உள்ளிட்ட விஷயங்களைச் செய்ய சட்டம் கொண்டு வருவோம் என்பது இதன் பொருள். இதை முஸ்லிம்கள் ஏற்கமுடியுமா என்று சிந்தியுங்கள். 450 ஆண்டுகாலம் அல்லாஹ்வின் வணக்கம் நடைபெற்ற பாபர் பள்ளிவாசலை சட்ட விரோதமாக மோடி கும்பல் இடித்து தகர்த்தனர். இப்போது ஆட்சியில் அமர்த்தினால் பள்ளிவாசல் இட்த்தில் கோவிலைக் கட்டுவோம் என்பதைச் சொல்லி ஓட்டு கேட்கிறது.
நம்முடைய பள்ளிவாசல்களை இடித்து விட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி கோவிலாக ஆக்குவார்கள் என்பது அவர்கள் வாயாலேயே தெளிவுபடுத்திய பின்னரும் இதை முஸ்லிம்கள் ஏற்கிறீர்களா?
குஜராத்தில் முஸ்லிம்களக் கொன்று குவித்து அவர்களின் சொத்துக்களைச் சூறையாடி முஸ்லிம் பெண்களின் மானபங்கம் செய்த பயங்கரவாதி மோடி நாட்டின் பிரதமராக ஆனால் நாடே குஜராத்தாக மாறுமே இதற்கு நீங்கள் உடன்படுகிறீர்களா?
முஸ்லிம்கள் வாழ்வதே கேள்விக்குறியாக்கப்படும் என்பதை உணர்ந்து நம் வாக்கைச் செலுத்தும் கடமை நமக்கு உள்ளது.
தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் வெல்ல முடியாது என்பதிலும். பாஜகவுக்கு எந்த முஸ்லிமும் ஓட்டு போட மாட்டார் என்பதிலும் சந்தேகம் இல்லை.
ஆனால் மாநிலத்தின் இரண்டு பெரிய கட்சிகளான திமுக அல்லது அதிமுக தான் வெற்றி பெற முடியும் என்பதால் இரண்டில் ஒன்றைத்தான் முஸ்லிம்கள் தேர்வு செய்யும் நிலையில் இருக்கிறோம்.
தேர்தலுக்குப் பின்னர் பாஜக ஆட்சி அமைக்க இவ்விரு கட்சிகளில் யார் துணை நிற்க வாய்ப்பு உள்ளது என்பதன் அடிப்படையில் தான் நாம் முடிவு செய்தாக வேண்டும்.
திமுகவைப் பொருத்தவரை பாஜகவை ஆட்சியில் அமர விட மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லி வருகிறது. முஸ்லிம்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராக பாஜக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை வெளிப்படையாக திமுக கண்டித்தும் விமர்சனம் செய்தும் வருகிறது.
ஆனால் அதிமுகவின் நிலை என்ன?
இடஒதுக்கீட்டை அதிகரித்துத்தர ஆணையம் அமைத்த அதிமுகவிற்கு வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளிப்பது என்று முதலில் தவ்ஹீத் ஜமாஅத் முடிவை அறிவித்திருந்தது.
ஆரம்பத்தில் தானே பிரதமர் என்று பிரச்சாரத்தைத் துவக்கிய ஜெயலலிதா அதிமுக என்ற இந்த எக்ஸ்பிரஸ் டெல்லிக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் என்றும் அதற்கு ஓட்டுனராக நான் இருப்பேன் என்றும் பேசினார். அவர்தான் பிரதமர் என்ற கோணத்தில்தான் அதிமுகவினரும் பிரச்சாரம் செய்தனர். பாராளுமன்ற வடிவில் மேடை, அதில் ஜெயலலிதா கொடி ஏற்றுவது போல காட்சிகள் என்ற நிலையைக் கண்ட நாம் தன்னைப் பிரதமராக அறிவித்துள்ளவர் பாஜகவின் மோடியைப் பிரதமராக்க ஆதரவு தெரிவிக்க மாட்டார் என்று கருத்தை விதைத்தார்.
பிரச்சாரத்தைத் துவக்கிய ஜெயலலிதாவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. அதிமுக அங்கம் வகிக்கும் ஒரு அரசாங்கம் அமைய வேண்டும் என்று திடீரென்று சுருதி குறைத்து பேச ஆரம்பித்தார். தன்னைப் பிரதமராக அறிவித்தவர் தான் அங்கம் வகிக்கும் வகையிலான மத்திய அரசு என்று பேச ஆரம்பித்தது முஸ்லிம் சமுதாயத்துக்கு மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியது.
மேலும் போகின்ற ஊர்களில் எல்லாம் காங்கிரஸையும், திமுகவையும் கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்த அவர் பாஜக குறித்து லட்சத்தில் ஒரு பங்கு கூட வாய் திறக்கவில்லை.
பாஜகவையும் மோடியையும் விமர்சித்து ஜெயலலிதா பேசாமல் வாய் மூடி இருப்பதால் தேர்தலுக்குப் பிறகு இவர் பிஜேபியை ஆதரிப்பார் என்ற சந்தேகத்தை நீக்கும் வகையில் அவர் வெளிப்படையாக தனது கருத்தைச் சொல்ல வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் பலவகைகளில் முயற்சி செய்தது. அவர் இது குறித்து வாய்திறக்கும் வரை எங்களால் அதிமுகவை ஆதரித்து பொதுக் கூட்டங்களில் பேச இயலாது என்றும், கொடுத்த தேதிகளை ரத்து செய்தும், இதனால் ஏற்படும் விளைவுகளையும் அதிமுகவின் நால்வர் குழு உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் தவ்ஹீத் ஜமாஅத் எடுத்துக் கூறியது.
இதன் பிறகும் அவர் பாஜக பற்றி வாய்திறக்கவில்லை.
தா. பாண்டியன் கேள்வி எழுப்பினார். கருணாநிதி, ஸ்டாலின் என அனைத்து எதிர்க்கட்சியினரும் கேள்வி எழுப்பினார்கள். அப்போதும் ஜெயலலிதா பாஜக பற்றி வாய்திறக்கவில்லை.முஸ்லிம்களை அழித்தொழிக்கும் விதமாக வெளியிடப்பட்ட பாஜகவின் நாசகார சிந்தனை கொண்ட தேர்தல் அறிக்கை வெளியானது. பாஜகவின் தேர்தல் அறிக்கை வெள ஏன் இதுவரை பாஜக குறித்து வாய்திறக்க மறுக்கின்றார் என்று பா.சிதம்பரம் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கட்சியின் ராம கிருஷணன் கேள்வி எழுப்பினார்.ியானவுடன் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் பாஜகவைக் கடுமையாக விமர்சனம் செய்து பேசினர்.
முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுக்கும் வகையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியான பின்பும் ஜெயலலிதா பாஜக பற்றி வாய் திறக்கவில்லை.
பாஜகவுடன் ஒப்பந்தம் செய்திருந்தால் மட்டுமே இப்படி அசாத்திய மவுனம் சாதிக்க முடியும் என்பது உறுதியானதால் தவ்ஹீத் ஜமாஅத் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. திமுகவை ஆதரிக்கும் முடிவை எடுத்துள்ளது.
அதிமுகவுக்குப் போடும் ஓட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டுதான் என்பது தெள்ளத்தெளிவாகி விட்டதால்
அதிமுகவுக்கு வாக்களிப்பது தங்கள் கைகளால் தங்கள் கண்களைக் குத்திக் கொள்வதாகும். தமது அழிவை தமது கைகளால் தேடிக் கொள்வதாகும்.
அதிமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்ற கருத்துக் கணிப்புகளை முஸ்லிம் வாக்குகள் முறியடிக்கும் வகையில் அதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற முடியாத அளவுக்கு
உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இதுவரை வாக்களிப்பதில் அலட்சியமாக இருந்த முஸ்லிம்கள் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்கான சமுதாயக் கடமை தமக்கு உள்ளது என்பதை உண்ர்ந்து வாக்களிக்க வேண்டும்
நாம் வாக்களிப்பது மட்டுமின்றி சொந்த வேலையாகக் கருதி வரவிருக்கும் ஆபத்தை சமுதாயத்துக்கு புரியவைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம் சமுதாயத்துக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கிறது.
courtesy:
TNTJ
Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author