பட்டுக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர் கைது (படங்கள் இணைப்பு)

இன்று 11/4/2017 செவ்வாய் கிழமை அன்று தமுமுக வின் சமூகநீதி மாணவர் பேரவை சார்பாக பட்டுக்கோட்டை போஸ்ட் ஆபிஸ் சரியாக காலை 10.30 மணி அளவில் விவசாயிகள் ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அந்த அமைப்பின் மாவட்ட செயலாளர் செந்தை மீராசா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட சமூக நீதி மாணவர் அமைப்பின் மாநில செயலாளர் திருச்சி நூருத்தீன் அவர்கள் கண்ட உரையாற்றினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு அருகில் உள்ல மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Close