மல்லிப்பட்டினம் கலவரத்திற்கு பா.ஜ.கவே காரணம் – தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து எஸ்.டி.பி.ஐ கட்சி மனு!!

           

         
            தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழக்கூடிய
பகுதியாகும். இங்கு பெரும்பான்மையானவர்கள் மீன்பிடித் தொழிலை
செய்துவருகின்றனர். சமூக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவரும் இப்பகுதி
மக்களிடையே அரசியலுக்காக பாஜக வின் தஞ்சை வேட்பாளர் கருப்பு (எ)
முருகானந்தம் வன்முறையை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தியுள்ளார்.
            எஸ்.டி.பி.ஐ கட்சி கலவரத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ததோடு சட்ட
ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் இன்று எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர்கள் அப்துல் சத்தார்,
அமீர் ஹம்சா, மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா, வட சென்னை மாவட்ட தலைவர்
முகம்மது ரஷீத்
ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவின் குமார் அவர்களை நேரில் சென்று
சந்தித்து, கலவரத்திற்கு பாஜக வின் தஞ்சை வேட்பாளர் கருப்பு (எ)
முருகானந்தம் தான் காரணம். எனவே கலவரத்திற்கு காரனாமனவர்கள் மீது கடுமையான
நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு
அளிக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

Close