ஆதார் எண்ணை இணைக்காத வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்..!

Want create site? Find Free WordPress Themes and plugins.

வ ரும் ஏப்ரம் 30ம் தேதிக்குள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கணக்கு முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2014 முதல் ஆகஸ்ட் 2015 வரையிலான காலத்தில் திறக்கப்பட்ட அனைத்து வங்கி கணக்குகளுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேலும் கணக்கின் உரிமையாளர் அனைவரும் KYC படிவம் மற்றும் FATCA கட்டுப்பாடுகளின் ஒப்புதலுக்கான கையப்பமிட்ட சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இதனைச் செய்யத் தவறினால், கணக்குகள் முடக்கப்படும் என்றும் வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் முடக்கப்பட்ட கணக்குகளுக்குச் சரியான தகவல்களைக் கணக்கின் உரிமையாளர் அளித்துவிட்டால், வங்கி நிர்வாகத்தால் உடனடியாகக் கணக்கை செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்றும் வருவமான வரித்துறை தெரிவித்துள்ளது.

இதையடுத்து இனி பணப் பரிமாற்றம், டெப்பாசிட் என ஏந்தொரு காரணத்திற்காக வங்கி பரிவர்த்தணை செய்தலும் ஆதார் அட்டையின் நகல் மற்றும் ஜெராக்ஸ் காப்பியுடன் செல்ல வேண்டியிருக்கும்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author