வான வேடிக்கையுடன் துவங்கவுள்ள 7-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி

இன்று 7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக இன்று முதல் 30ம் தேதி வரை துபாயில் உள்ள ஷார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் இந்த 7-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  நடைபெறவுள்ளது. மே மாதம் 2ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை இந்தியாவில் ஐ.பி.எல் ஆட்டங்கள் நடைப்பெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
அபுதாபியில் இன்று மாலை 6:30PM மணியளவில் வான வேடிக்கைகளுடன் துவங்கவுள்ள 7-வது ஐ.பி.எல் 20 ஓவர் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளது.

Close