அதிரையில் முஸ்லிம் லீக் நடத்திய மதநல்லிணக்க விழாவில் பெரும்திரளானோர் பங்கேற்பு!

அதிரையில் முஸ்லீம் லீக் சார்பாக மாபெரும் மத நல்லிணக்க விழா சிறப்பாக நடைபெற்றது. அதிரை பேருந்து நிலையில் மாலை 4:30 மணிக்கு தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்கு அதிரை நகர முஸ்லிம் லீக் தலைவர் கே.கே.ஹாஜா முஹைதீன் தலைமை வகித்தார்.  இந்த நிகழ்ச்சிக்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அமைப்பாளர் பழஞ்சூர் செல்வம், அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு தலைவர் ஹாஜி.MMS.ஷேக் நசுருத்தீன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் ஜலீலா முஹைதீன் மற்றும் பலர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர்.

அதிரை நகர முஸ்லிம் லீக் பொருளாளர் ஷேக் அப்துல்லாஹ் அவர்களின் வரவேற்புரையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தஞ்சை ஆற்றங்கரை ஜும்மா பள்ளியின் தலைமை இமாம் அப்துல் ரஹ்மான் மன்பயீ, கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.M.A.அபூபக்கர், துரைமுகம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு உரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியில், அதிரை லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஆறுமுகசாமி, சகோதர வலைதளமான அதிரை நியூஸ் ஆசிரியர் M.நிஜாமுத்தீன், அதிரை முஸ்லீம் லீக் மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது ஆகியோருக்கு கண்ணியமிகு காயிதே மில்லத் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.  இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து ஏராளமான முஸ்லிம் லீக் நிர்வாகிகள், பொதுமக்கள், மாற்றுமத சகோதரர்கள்ள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

Close