அதிரை ESC நடத்தும் 8-ஆம் ஆண்டு மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி!

 

அதிரை EASTERN SPORTS CLUB சார்பாக 8-ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி அதிரை காட்டுப்பள்ளி வாசல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு முதல் பரிசாக 10000 ரூபாயும், 2-ஆம் பரிசாக 8000 ரூபாயும், 3 ஆம் பரிசாக 6000 ரூபாயும், 4-ஆம் பரிசாக 4000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இதில் பல தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளனர். இந்த தொடரில் உங்கள் அணியும் பங்குபெற விரும்பினால் நுழைவுக்கட்டணமாக 300 ரூபாயை செலுத்தி விண்ணபிக்கலாம்.  மேலும் இந்த போட்டியை காண விளையாட்டு ரசிகர்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு அணி நிர்வாகம் சார்பாக கேட்டுகொள்ளப்படுகிறது.

Close