அதிரையில் அம்மா மாலை நேர வார காய்கறி சந்தை தொடக்கம் (படங்கள் இணைப்பு)

மாநிலம் முழுவதும் அம்மா வார சந்தை திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சந்தையில், கிடைக்கும் காய்கறிகள் தரமானதாகவும், விலை நியாயமானதாகவும் கிடைப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அதிரை தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி வாசல் பின்புறமாக உள்ள மைதானத்தில் அம்மா வார சந்தை இன்று மாலை 5 மணிக்கு தொடங்கப்பட்டது. இதில் ஏராளமான காய்கறி வியாபாரிகள் கலந்துகொண்டு விற்பனை செய்தனர். முதல் நாளான இன்று இங்கு ஏராளமான காய்கறிகளை வாங்க ஏராளமான பெண்கள் வருகை தந்து காய்கறிகளை வாங்கிச்சென்றனர். இந்த சந்தை வாரா வாரம் வியாழன் மாலை இதே இடத்தில் நடக்கும் என்று இந்த சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இது நிச்சயம் அதிரையர்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

தகவல்: ரிஜாயத்

Close