அதிரை பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பில் பின்தங்கி உள்ளனரா?

உலகம் நாள்தோறும் பல்வேறு பரிமாண வளர்ச்சிகளை கண்டுவருகிறது. அதற்கு ஏற்றார் போல் பெற்றோர்கள் அப்டேட்டாக இருக்கிறார்களா என்றால், நிச்சயம் அதற்கான விடை கேள்வி குறியாகவே இருக்கும். மனித பிறப்பில் குழந்தை வளர்ப்பு ஓர் கடமையாக கருதபடுகிறது, ஆனால் உண்மையில் அது ஓர் கலை. இந்த கலையினை தற்கால பெற்றோர்கள் நிச்சயம் தங்களின் முன்னோர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். முன்பெல்லாம் இதற்கான வாய்ப்புகள் இயல்பாகவே ஏற்படும். ஆனால் இந்த வாய்ப்புகளை சிலர் முறையாக பயன்படுத்தினாலும் பலர் கோட்டைவிட்டு விடுகின்றனர்.
புத்தகங்களை படிக்க வேண்டும்:
சரி தற்பொழுது நமது தலைப்பிற்குள் செல்வோம். முன்பு சொல்லியது போன்று குழந்தை வளர்ப்பு என்பது ஓர் அற்புத கலை. இந்த கலையினை பெற்றோர்கள் மனம் போன போக்கில் பின்பற்றினால் அதனால் பாதிக்கப்பட போவது தங்களின் குழந்தையில் எதிர்காலமாகவே இருக்கும். இதனை தவிர்க குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவு திறனை அப்பேட்டாக வைத்திருக்க வேண்டும். இதற்காக நாம் குழந்தைகள் மனநலம் சார்ந்த பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டியது வரும். ஏனெனில் உடல்நலமும் மனநலமும் ஓர் நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவை.

 

குழந்தையின் மனநல உத்திகளை பயன்படுத்த வேண்டும்:

நாம் எப்படி குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுகின்றமோ, அதேபோல் மனநலம் சார்ந்த பாதிப்புகளை குழந்தைகள் சந்திக்கும் பொழுது அதனை கையாளும் முறையினையும் மேலோட்டமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவ்வாறு பெற்றோர்கள் குழந்தையின் மனநலம் சார்ந்த உத்திகளை பயன்படுத்தும் சமயத்தில் தங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கைமிக்க குழந்தைகளாக வளர்வார்கள். இதன்மூலம் வாழ்கையில் ஏற்படும் தடைகளை வெற்றிபடி கற்களாக மாற்றி தொடர்ந்து முன்னேறி செல்ல நாம் பக்கபலமாக இருக்க முடியும்.
இதற்காக பல்வேறு தரமிக்க எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள புத்தகங்கள் சந்தைகளில் கிடைக்கின்றன. இவைகளை ஒவ்வொறு பெற்றோரும் நிச்சயம் படித்து தங்கள் குழந்தையின் மனநலம் சார்ந்த உத்திகளை தெரிந்துகொள்ளலாம்.
அழுகிற குழந்தையை சிரிக்க வைப்பதும், ஓர் மனநலம் சார்ந்த உத்தி தானே!
-ஜெ.முகம்மது சாலிஹ்
தொ.எண்: 9500293649
Close