அதிரை AFCC நடத்திய APL கிரிக்கெட் தொடர்-சுழற்கோப்பையை கைப்பற்றியது தஞ்சை RVMCC (படங்கள் இணைப்பு)

அதிரை ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் (AFCC) அணி வருடா வருடம் கிரிக்கெட் பந்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர்போட்டியை சிறப்பாக நடத்தி வருகிறது. அந்த வகையில் அந்த அணி 12-வது ஆண்டாக நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 1/04/2017 காலை நமதூர் ஷிபா மருத்துவமனை எதிரில் உள்ள கிரானி மைதானத்தில் கோலாகளமாக தொடங்கியது.

கடந்த 15 நாட்களாக பரபரப்பாக நடைபெற்ற இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெற்றது. இதில் RVMCC தஞ்சை அணியை எதிர்த்து Gold moon நாகப்பட்டினம் அணியினர் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் RVMCC தஞ்சை அணியினர் ஆபார வெற்றி பெற்று APL கோப்பை கைப்பற்றினர்.

இதில் தோல்வியடைந்த நாகப்பட்டினம் அணிக்கு 2 வது பரிசும், தமிழன் CC அறந்தாங்கி அணியினருக்கு 3 வது பரிசும், MAR வாரியர்ஸ் திருச்சி அணியினருக்கு 3-வது பரிசும் வழங்கப்பட்டன.  இறுதி நாளான இன்று போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டு இருந்தனர். இந்த தொடர் ஏற்பாடுகளை AFCC அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Close