துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் பட்டாம்பூச்சி பூங்கா! (படங்கள் இணைப்பு)

பட்டாம்பூச்சியை ரசிக்காதவர்கள் மிக குறைவே அதிலும்ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகளை ஒரே இடத்தில் காண்போமானால் உள்ளம் பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கும் எனபதில் சந்தேகமில்லை.பார்வையாளர்களின் மனம் கவரும் வகையில் துபாயில் லட்சக்கணக்கணக்கான மலர்களோடு அமைந்துள்ள மிராக்கிள் கார்டன் எனும் மலர் பூங்கா இதன் அருகிலலேயே ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகளுடன் பட்டர் பிளை கார்டன் என அழைக்கப்படும் பட்டாம் பூச்சி பூங்கா ஏற்படுத்தப்பட்டு மக்களின் பார்வைக்கு சமீபத்தில் திறக்கப்பட்ட‌து.

இப்பூங்காவில் 9 மண்டபங்கள் அமைக்கப்பட்டு அதன் உள் அரங்கத்தில் பட்டாம்பூச்சிகள் வாழ்வதற்கு ஏற்ற சீதோஷன நிலை உருவாக்கப்பட்டு அங்கு பல்வேறு வகையான மலர்களுடன் கூடிய செடி,கொடிகளோடு ஆயிரக்கணக்கான பட்டாம் பூச்சிகள் பறக்கவிடப்ட்டுள்ளது. கலர் கலராக சுற்றி திரியும் பட்டாம்பூச்சிகள் பார்வையாளர்களின் மனதை கவர்கிறது. இதுவே உலகின் மிகப்பெரிய பார்வைளர்களுக்கான பட்டாம் பூச்சி பூங்கா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவியும் இப்பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக 50 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Close