உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களுக்கான டைம்ஸ் பத்திரிக்கை நடத்திய வாக்கெடுப்பில் மோடிக்கு பூஜ்ஜியம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

டைம்ஸ் பத்திரிகை, ஒவ்வொரு ஆண்டும் ‘உலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலை’ வெளியிடும். இந்த ஆண்டு அப்படிப்பட்ட ஒரு பட்டியலை உருவாக்குவதற்கு முன்னர், ஆன்லைனில், ஒரு சர்வே நடத்தியது. அதில், யாரெல்லாம் உலகின் செல்வாக்கு வாய்ந்த நபர்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று வாசகர்கள் நினைக்கிறார்களோ அவர்களை தேர்ந்தெடுக்கலாம்.
இந்த சர்வேயில், பிலிப்பைன்ஸின் அதிபர் ரோட்ரிகோ ட்யூடெர்ட், முதல் இடத்தில் வந்தார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட், போப் பிரான்சிஸ் போன்றவர்கள் அடுத்தடுத்து இடங்களில் வந்தனர். ரோட்ரிகோ, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பதவிக்கு வந்த பின்னர், போதைப் பொருள் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதனால், பிலிப்பைன்ஸில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆன்லைன் சர்வேயில் இந்திய பிரதமர் மோடிக்கு, ‘பூஜ்ஜியம் சதவிகித’ வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் இந்த பட்டியலில் அவரது பெயரே இடம்பெறவில்லை.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author