நாதியின்றி கிடக்கும் பள்ளிவாசல், அதிரை தமுமுக-வினர் நேரில் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம் ஈசிஆர் சாலை அருகே உள்ளது சீத்றாமடம் என்ற கிராமம். இந்த கிராமதில் 1980 ஆண்டு பள்ளிவாசல் கட்டப்பட்டு அங்கு தொழுகைகள் மற்றும் இதர அமல்கள் நடைபெற்று வந்தன. இந்த கிராமத்தில் சுமார் 50 இஸ்லாமிய குடும்பங்கள் வசித்து வந்ததாகவும் காலப்போக்கில் அவர்கள் வெவ்வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது அங்கு சுமார் 18 இஸ்லாமிய குடும்பங்கள் மட்டுமே வசித்து வருகின்றன.

இருப்பினும் இந்த மக்கள் பலரும் இந்த பள்ளிவாசலுக்கு வராத காரணத்தாலும், இந்த பள்ளியில் இமாம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் வஃபாத்தாகிவிட்டதாலும் இந்த பள்ளியில் சில ஆண்டுகளாக தொழுகை நடைபெறுவதில்லை. இதனால் போதிய பராமரிப்பு இன்றி பள்ளிவாசல் கட்டிடம் சிதைந்து வருகிறது. எனவே பாலடைந்து காணப்படும் இந்த பள்ளிவாசல் கட்டிடத்தை சமூக விரோதிகள் மது அருந்துவதற்காக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. பலபகுதிகளில் தொழுகைக்காக பள்ளிவாசல் இல்லை என மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், பள்ளிவாசல் இருந்தும் தொழுகைக்கு வராத காரணத்தால் அல்லாஹ்வின் இந்த இல்லம் அனாச்சாரங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருவது வேதனையை ஏற்படுத்துகிறது.

ஊரில் பள்ளிவாசல் கட்ட ஆசைப்படும் செல்வந்தர்கள் தப்லீக் ஜமாத் செல்லும் உலமாக்களுடன் இணைந்து இந்த பள்ளிவாசலை நல்ல நிலைக்கு கொண்டு வந்து அதில் அந்த கிராம மக்களை தொழுகைக்காக அழைக்க முயற்சி செய்யலாம்… இந்த செய்தியை நேற்று நாம் அதிரை பிறையில் பதிந்து இருந்தோம். இந்த நிலையில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலமாக இந்த வீடியோ மற்றும் தகவல் வைரலாக பரவியது. இந்த நிலையில், நேற்றைய தினம் அதிரை தமுமுக தலைவர் சாகுல் ஹமீது, தமுமுக மாவட்ட அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா உள்ளிட்டவர்கள் இந்த பள்ளிவாசலை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

Close