ஏப்ரல் 21 முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை !

வெப்பக்காற்று வீசுவதால் ஏப்ரல் 21 முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 21 முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ”தமிழகத்தில் வெப்பக்காற்று வீசுவதால் பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஏப்ரல் 21 முதல் 29-ம் தேதி வரை தொடக்கப் பள்ளிகளுக்கு தேர்வுகள் நடைபெற இருந்தன. இந்தத் தேர்வுகளுக்கு மாற்றுத் தேதி அறிவிக்கப்படும்.

தனியார் பள்ளிகள் சிறப்புப் பயிற்சி வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Close