அதிரை 15-வது வார்டில் தமுமுக, மமக வின் புதிய கிளை உதயம் (படங்கள் இணைப்பு)

நேற்றைய தினம் (18-4-17) என்று அதிரை தமுமுக நகர அலுவலகத்தில் 15-வது வார்டுக்கான தமுமுக, மமக கிளை புதிதாக துவங்கப்பட்டது. நகர தமுமுக, மமக தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் அஹமது ஹாஜா, நகர மமக செயலாளர் இத்ரீஸ் அஹமது, நகர தொழிற்சங்க தலைவர் ஹக்கீம், எம்,எஸ்.எம் கிளை செயலாளர் ஹாதில் அஹமது ஆகியோர் இதில் முன்னிலை வகித்தனர்.  இதில் தமுமுக மமக நகர பொருளாளர் முஹம்மது யூசுப் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில், 150வது கிளைக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.

தமுமுக, மமக செயலாளராக சீமான், தமுமுக செயலாளராக சுகைர், மமக செயலாளராக ஜியாத், தமுமுக மமக பொருளாளராக அப்சர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

Close