சென்னை, திருச்சியுடன் போட்டி போடும் அதிரை!

ஏப்ரல் 19-ம் தேதி வரை வெப்பக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள போதிலும் அதையும் தாண்டி இன்றும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே தலை காட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் அதிரையிலும் பெரு நகரங்களுக்கு போட்டிப்போட்டுக்கொண்டு வெயில் வாட்டி வருகிறது. கடந்த ஒருவாரமாக அதிரையில் 95 டிகிரிக்கும் மேல் வெப்பம் நிலவி வருகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட வெப்பம் அதிகமாக நிலவும் பெரு நகரங்களுக்கு இணையாக நமது அதிரையிலும் வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

Close