குப்பைகளால் மூடப்பட்ட அதிரை புதுமனைத்தெரு!

அதிரை புதுமனைத்தெரு மரைக்கா குளம் மேட்டில் குப்பைத்தொட்டிக்கு பதிலாக மூன்று குப்பை வண்டியை வைத்திருப்பதால், அந்த வண்டிகளின் மேல் குப்பைகளை கொட்டுவந்தனர். பேரூராட்சியின் அலட்சியத்தால் கடந்த சில நாட்களாக அந்த வண்டியின் மேலுள்ள குப்பைகளை அல்லாமல்விட்டதால் அந்த வண்டிகள் குப்பைகளால் நிரம்பியதில் அங்கு வசிக்ககூடிய பொதுமக்கள் அந்த வண்டிகளுக்கு அருகே உள்ள இடத்தில் குப்பைகளை கொட்டிவருகின்றனர்.

அப்படியே போரூராட்சி ஊழியர்கள் வந்தாலும் குப்பைவண்டியில் உள்ள குப்பைகளை மட்டும் தான் சுத்தம் செய்கிறார்கள். அதன் அருகில் கொட்டப்பட்ட குப்பைகளை சுத்தம் செய்யாமல் மலைபோல் குமித்துவைத்து செல்கின்றனர்.

குமித்துவைத்த அந்த குப்பைகள் எல்லாம் காற்றில் பறந்து அருகில் இருக்கக்கூடிய வீட்டு வாசல்களில் திரண்டு அப்பகுதி முழுவதுமே குப்பையால் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களுக்கும் அங்கு வசிக்கக்கூடியவர்களுக்கு இடையூராக உள்ளது.

இந்த குப்பைகளை பேரூராட்சி சுத்தம் செய்யுமா? இல்ல வழக்கம்போல அலட்சியமாகவே இருக்குமா?

Close