மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மாணவர்கள் கைது ! புகைப்படங்கள்


            
              மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிண்டி பேருந்து நிலையம் அருகே மோடி செல்லும் வழியில் கறுப்புக் கொடி காட்டி பின் 15 நிமிடம் சாலை மறியலில் ஈடுபட்டனர் .

தமிழ்நாட்டின் உயிர் துடிப்பான காவிரி பிரச்சனைக்கும் , தமிழக மீனவர்கள்
நாளும் செத்து மடிவதைப்பற்றியும் , தமிழீழத்தைப் பற்றியும் , தமிழர் நலன்
சார்ந்த எல்லாவற்றையும் தேர்தல் அறிக்கையில் மவுனம் சாதித்து காங்கிரசை
போலவே செயல்படும் பா.ஜ.க வை தமிழ் நாட்டில் நுழையவிடமாட்டோம் என
இப்போரட்டத்தின் மூலம் எச்சரித்துள்ளனர். இந்த போராட்டத்தில்

தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு,
கேம்பஸ் ஃபிரண்ட் ஆப் இந்தியா,
முற்போக்கு மாணவர் முன்னணி ,
தமிழ்நாடு மாணவர் இயக்கம்,
ஆகிய மாணவ இயக்கங்களைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்து
கைதாகியுள்ளனர்.

-பா.ஜ.க விற்கு எதிரான மாணவர்கள்
Close