ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மால் கிளையின் ஆலோசனைக் கூட்டம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 45 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14/04/2017 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.
நிகழ்ச்சி நிரல்:-
கிராத் : சகோ. சாகீர் S/o மன்சூர் ( உறுப்பினர் )

முன்னிலை : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )

வரவேற்புரை : சகோ. A. அபூபக்கர் ( பொருளாளர் )

சிறப்புரை : சகோ. A.M.அஹமது ஜலீல் ( துணை செயலாளர் )

அறிக்கை வாசித்தல் : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நன்றியுரை​​ : சகோ. A.சாதிக் அகமது ( இணை தலைவர் )

தீர்மானங்கள்:

1) எதிர்வரும் ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் மெகா கூட்டம் இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு வரும் JUNE-9 2017 (வெள்ளிக்கிழமை) மாலை கிளாசிக் ஆடிட்டோரியத்தில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்கான முன் ஏற்பாடு திட்டங்களை அடுத்த கூட்டத்தில் அறிவிப்பது என முடிவு செய்யப்பட்டது.
2) இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் நோன்பில் ஜகாத், ஃபித்ரா விஷயமாக ஆர்வமூட்டப்பட்டு அதற்கான பொறுப்புதாரிகள் நியமிப்பது விஷயமாக ஆலோசிக்கப்பட்டது.
3) ABM தலைமையகத்தில் நடைபெற இருக்கிற தேர்தல் சிறப்பாக நடைபெறுவதற்கு ரியாத் ABM சார்பாக மனமார்ந்த வாழ்த்து தெரிவித்து கொள்ளப்பட்டது.

4) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் MAY 2017 12-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டு அதில் அதிரை வாசிகள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

​​​… ஜஸாகல்லாஹ் ஹைர்…

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author