அதிரையில் சிறப்பாக தொடங்கிய ESC யின் கைப்பந்து தொடர் போட்டி! (படங்கள் இணைப்பு)

அதிரை EASTERN SPORTS CLUB சார்பாக 8-ஆம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர்போட்டி அதிரை காட்டுப்பள்ளி வாசல் மைதானத்தில் இன்று இரவு தொடங்கியது. இதற்கு முதல் பரிசாக 10000 ரூபாயும், 2-ஆம் பரிசாக 8000 ரூபாயும், 3 ஆம் பரிசாக 6000 ரூபாயும், 4-ஆம் பரிசாக 4000 ரூபாயும் வழங்கப்பட உள்ளது. இதில் பல தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இதனை காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குழுமியுள்ளனர். இரவு முழுவதும் தொடர்ந்து நடைபெறும் இந்த போட்டி நாளை மாலையுடன் நிறைவுபெற்று பரிசளிப்பு விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Close