அதிரையில் கரண்டு வந்தா தண்ணி இல்லே! தண்ணி வந்தா கரண்டு இல்லே!

நாம் அனைவரும் “கல் இருந்தா நாய காணோம், நாய் இருந்தா கல்ல காணோம்” என்ற ஒரு பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். இந்த பழமொழிக்கு மிகச்சரியாக பொருந்தியுள்ளது நம் ஊரின் நிலை.  ஆம் இது குறித்த ஒரு கலந்துரையாடலை நாம் பார்போம்.
ஜமால்: என்ன கமாலு காலங்காத்தால ஏதொ பை யை தூக்கிகிட்டு போர, அப்புடி என்ன வேலை..!
கமால்:  வெயில் தாங்க முடியல, அதான் காலையிலேயே தோப்புக்கு குளிக்க போறேன் அதான் பை யில மாத்து துனி டவல் எல்லாம் எடுத்துட்டு போறேன்.
ஜமால்: ஏன் தோப்புக்கு குளிக்க போறா? வீட்டுல குளிக்க வேண்டியது தானே
கமால்:  அத யான் நீ கேட்குறா, ஹூம் ரொம்ப வருசமா வீட்டுல போர் இருந்ததால தண்ணி பிரச்சனையே இல்லாம சந்தோஷமா இருந்தோம், ஆனா இப்போ போர்லயும் தண்ணி வரல, நடுத்தெரு, வாய்க்கால் தெரு, புதுமனைத் தெருவுல எல்லாம் தண்ணி 200 அடிக்கும் கீழ தான் வருதாம்.
ஜமால்:  ஆமாம், எங்க சாச்சி வீட்டுல கூட இப்ப நீர் மீழ்கி மோட்டர் போட்டிருக்காங்க, உங்க வீட்டுலயும் போட வேண்டியது தானே.
கமால்: அதுக்கு எல்லாம் ரோம்ப செலவாகும், அதான் கார்ப்பரேஷன் தண்ணிய யூஸ் பண்ணுரோம். அதுவும் பெரிய பிரச்சனையா இருக்குது..
ஜமால்:  அதுல என்னா பிரச்சனை?
கமால்: கொஞ்ச நாளா கரண்டு போவாம இருந்துச்சு, இப்ப  சில வாரமா கரண்டு ஓவரா போவுது, காலையில சீக்கிரமா முழிச்சு மோட்டார ஆண் பண்ணுனா உற்ர்ர்ருண்டு சத்தம் வருது என்னன்னு பாத்தா தண்ணி இன்னும் வரல, அப்புறம் 11:30 மணிக்கு  தண்ணி வந்திருச்சுன்டு வேக வேகமா போய் மோட்டர ஆன் பண்ணுனா கரண்டு கட் ஆயிருச்சு, இது ஒரு நாள் பிரச்சனை இல்லே! ஒவ்வொரு நாளும் இதே தொல்லை தான் என்ன பண்றது சொல்லு..
ஜமால்: நீ சொல்லுறதும் சரிதான் தேர்தல் நேரத்துனால இல்லாரும் பிசியா இருக்காங்க போல.
கமால்: அதுக்காக நம்ம தண்ணி இல்லாம திண்டாரதா? இது என்ன நியாயம்
ஜமால்: ஆமாம் இதுக்கு ஒரு விடுவுகாலம் பிறக்குமான்னு பார்ப்போம். சரி எனக்கும் நேரமா போச்சு, நாளைக்கு நானும் தோப்புக்கு குளிக்க வரேன் என்னையும் கூட்டிட்டு போ. அஸ்ஸலாமுஅலைக்கும் 
கமால்: சரி வரேன், வஅலைக்குமுஸ்ஸலாம்… 
Close