அதிரையின் அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் மக்தப் மதர்சாக்கள் (படங்கள் இணைப்பு)

அதிராம்பட்டினம். பல்லாண்டுகளாக மார்க்க அறிஞர்களையும், மதர்சாக்களையும், மார்க்க நெறிமுறைகளையும் கொண்ட ஊர். இன்றளவும் கணக்கிட முடியாத அளவுக்கு ஆயிரக்கணக்கான ஆலிம்கள், ஹாஃபிழ்களை கொண்டுள்ள ஊர். ஆனால் கடந்த 20-25 அண்டுகளாக உலகக்கல்வின் மீதான முக்கியத்துவம் அதிகரித்ததை தொடர்ந்து அதிரையிலும் மதர்சாக்களுக்கும், மார்க்க கல்விக்கும் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைய துவங்கியது. இந்த சூழலில் 5,6 ஆண்டுகளாக அதிரையில் உள்ள ஒவ்வொரு பள்ளிவாசல்களில் மக்தப் மதர்சாக்களும் ஹிஃப்ழு பாடங்களும் முறையாக துவங்கப்பட்டு, அவற்றில் மாணவர்கள் சேர்வதற்காக உலமாக்கள் கடும் உழைப்புகளை செய்து வருகின்றனர்.

அந்த உழைப்பின் பலனாக அதிரையில் எப்படி பள்ளிக்கு செல்லும் போது நேரக்கட்டுப்பாட்டுடனும், சீருடையுடனும் மாணவர்கள் செல்கின்றனரோ அதே போன்று மக்தப் மதர்சாக்களுக்கும், சீருடை, நேரக்கட்டுப்பாடு, பாடத்திட்டம், சீசன் தேர்வுகள், மாணவர்களுக்கான போட்டிகள், வெற்றிபெறுபவர்களுக்கு ஆண்டு விழாக்களில் பரிசுகள் என சிறப்பான கட்டுப்பாடுகளுடனும், செயல்திட்டங்களுடனும் இந்த மக்தப் மதர்சாக்கள் பயணிக்க தொடங்கின. இதனால் தீனியாத் வகுப்புகளில் சொற்பமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கையில் தற்போது பண்மடங்கு பெருகி உள்ளது. ஏராளமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த மக்தப் மதர்சாக்களில் சேர்த்து அவர்களுக்கு மார்க்க கல்வியை வழங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிரை கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, இஜாபா பள்ளி, ரஹ்மானியா பள்ளி, பாக்கியதுஷ் ஷாலிஹாத் பள்ளி, சித்திக் பள்ளி, புதுப்பள்ளி உள்ளிட்ட பெரும்பாலான பள்ளிகளில் தீனியாத் வகுப்புகளில் ஏராளமான மாணவர்கள் இணைந்து குர்ஆன் மனனம் செய்தும், இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் வரலாறுகளையும் பாடதிட்டங்களின் அடிப்படையில் கற்று வருகின்றனர்.

உலமாக்களின் இந்த ஒப்பற்ற முயற்சியின் பலனை இன்ஷா அல்லாஹ் இனிவரக்கூடிய காலங்களில் நாம் காணலாம். இதுவரை மக்தப் வகுப்புகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பாத பெற்றோர்கள் இன்றில் இருந்து உங்கள் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இயங்கும் மக்தப் மதர்சாவில் சேர்த்து அவர்களின் இம்மை மறுமை வாழ்க்கை சிறக்க உதவிடுங்கள்.

கீழே உள்ள படங்கள்: அதிரை கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மக்தபில் முழு ஆண்டுத்தேர்வில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்.

Close