பட்டுக்கோட்டையில் குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்யும் பாரத மக்கள் மருந்தகம் திறப்பு!

மக்களை அழிக்கும் மது, மலிவாக கிடைக்கும் இத்தேசத்தில், மக்களைக் காக்கும் மருந்துகள் மலிவாக கிடைப்பதில்லை. ஏழையின் எட்டாக் கனிகளில் தரமான மருந்துகளும் அடக்கம். எனவே, அனைத்து உயர்தர மருந்துகளையும் குறைந்த விலையில் வழங்கி ஏழைகளின் உயிர் காக்க பட்டுக்கோட்டையில் உள்ள சுப்பையா பிள்ளை தெருவில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் பாரத மக்கள் மருந்தகங்கம் திறக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும்…

Close