அமீரக இளவரசரிடம் விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்த அபூபக்கர் சித்திக்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியை சேர்ந்தவர் ஆசிரியர் அபுபக்கர் சித்தீக். அல்-அய்ன் மாநகரத்தில் இருக்கும் GLOBAL ENGLISH SCHOOLல் PHYSICS ஆசிரியராக பணியாற்றிவரும் இவர் தனது மாணவர்களை வைத்து நான்கு சக்கர வாகனத்திற்கான கருப்பு பெட்டி(விபத்துகளை தடுக்கும் கருவி) ஒன்றை கண்டிபிடித்தார்.THINK SCIENCE CONFERENCE என்ற மாநாட்டில் இந்த முயற்சியை பாராட்டும் விதமாக அவர்களுக்கு அமீரகத்தின் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.சமீப காலமாக அமீரகத்தில் விபத்துக்கள் அதிகமடைந்ததை அடுத்து இவரின் இந்த கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் அதனை பாராட்டி துபை அரசாங்கம் இவருக்கு விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தூது ஆன்லைன்

Close