அதிரையில் நாளை அனைத்து கடைகளையும் அடைக்க வணிகர்களிடம் அழைப்புவிடுத்த அரசியல் கட்சியினர் (படங்கள் இணைப்பு)

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது.

தி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. ஓட்டல்கள் மூடப்படுகின்றன. தியேட்டர்களில் பகல் காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள். இதையடுத்து அதிரையில் உள்ள கடைகளை அடைத்து இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரி, திமுக, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வணிகர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.

Close