கடைகள் அடைப்பு! வெறிச்சோடிய அதிரை! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

தி.மு.க. அழைப்பு விடுத்த முழுஅடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. வணிகர் சங்கங்களும் முழு ஆதரவை அளித்துள்ளன. போக்குவரத்து தொழிலாளர்களும் முழு அடைப்பில் பங்கேற்கிறார்கள். இதையடுத்து நேற்று அதிரையில் உள்ள கடைகளை அடைத்து இந்த போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க கோரி, திமுக, முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வணிகர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இதன் விளைவாக இன்று அதிரையில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பேருந்து நிலையம், சேர்மன் வாடி, போஸ்ட் ஆபிஸ் ரோடு ஆகிய பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author