இரத்தம் வீணாவது தொடர்பாக அதிரை CBD நகர தலைவர் இப்ராஹிம் அலி அவர்களின் தன்னிலை விளக்கம்!

கடந்த 5 ஆண்டுகளில் 6 இலட்சம் லிட்டர் இரத்தம்
பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்பட்டுள்ளன

அதில் மஹாராஷ்டிரா, உ.பி,கர்நாடகா,
தமிழ்நாடு ஆகிய மாநில இரத்த வங்கிகளில்
போதுமான சேமிப்பு திறன் இல்லாததும்…..

இரத்த வங்கி – மருத்துவமனைகள் இடையில்
ஒருங்கிணைப்பு இல்லாததும்…. பல அறிய வகை
இரத்த தட்டணுக்கள் பயன் படுத்தப்படாமல் வீணாக்கப்பட்டுள்ளன

இரத்த தானத்தில் முன்னணி வகிக்கும்
அமைப்புகள் இதை கவனத்தில் கொள்ள
வேண்டும்

விளக்கம்:

Crescent blood donor(சிபிடி) யில் நிர்வாகிகளான எங்களுக்கு பல விதிகள் கட்டமைக்கபட்டு உள்ளது அதில் முதல் மற்றும் தலையாய விதியாதேனின்
நோயாளியோ,பாதிக்கபட்டவர்களையோ அவர்களை நேரில் போய் சந்தித்து ரத்த தேவையை உறுதிசெய்து அவர்களுக்கு எவ்வளவு ரத்தம் தேவையோ அவைகளை மட்டுமே எங்கள் சிபிடி பூர்த்தி செய்து வருகிறது. எந்த ஒரு சூழலிலும் நாங்கள் ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்குவதில்லை எங்களின் மூலம் வழங்கப்பட்ட ரத்தத்தில் ஒரு துளி கூட ரத்த வங்கிக்கு கொடுக்கவும் இல்லை வீணடிக்கபடவூம் இல்லை என்பதனை நாம் இந்த நேரத்தில் மார்தட்டி சொல்லாம். தமிழகம் முழுவதும் எங்களுடன் கைகோர்த்து இணைந்து நடைபோடும் ரத்த கொடையாளர்கள்(blood donors) நிங்கள் இல்லை என்றால் இப்படிபட்ட சாதனை சாத்தியமில்லை நீங்க எங்களுடன் இனைந்து வழங்கிய ரத்தம் ஒரு சிறு துளிகூட வீணடிக்கபடவில்லை. எங்கள் சேவையை என்று ஏற்றுகொண்டு இனைந்தே நடைபோடுங்கள் உறவுகளே
நன்றி

இப்படிக்கு

இப்ராஹிம் அலி, நகர தலைவர்,

கிரசண்ட் பிளட் டோனர்ஸ்
அதிரை நகரம்

Close