அதிரைக்குள் மேலும் ஒரு மதுக்கடை திறக்க முயற்சி! எச்சரிக்கை!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3,400 டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முடப்பட்டன.

மேலும், அக்கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்கு அப்பால் மாற்றப்படுகின்றன. அந்த வகையில் அதிரை ECR சாலையில்  அருகே அமைந்துள்ள 3 மதுபானக்கடை அகற்றப்பட்டன. இதையடுத்து இந்த இதில் அதிரை ஷிபா மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள பாத்திமா நகர் தண்ணீர் டாங்கி அருகே புதிய டாஸ்மாக் கடை அமைக்க அரசு முயற்சித்து வருகிறது.

இது தொடர்பாக அப்பகுதியில் நில உரிமையாளர்களிடம் இடத்தை வாங்க முயற்சித்து வருகின்றனர். பாத்திமா நகர் கூடிய விரைவில் குடியிறுப்பு பகுதியாக மாற உள்ள நிலையில், அங்கு ஒரு மதுபானக்கடை திறக்கப்பட்டால், அதனால் பாதிப்புகள் ஏராளம். எனவே அப்பகுதி நில உரிமையாளர்கள் இடத்தை விற்பனை செய்யும் முன்னர் ஒன்றுக்கு நூறு முறை விசாரித்து விட்டு நிலத்தை விற்பனை செய்யலாம்.

அதே பகுதியில் ஒரு மதுக்கடை இருந்து மக்களுக்கும், போக்குவரத்துக்கும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது அங்கு மேலும் ஒரு மதுக்கடை திறப்பது கண்டிக்கத்தது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் விசாரித்து இதனை துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். இல்லையென்றால் நம் எதிர்கால சந்ததிகளும் குடிகாரர்களாக மாறக்கூடும்.

Close