அதிரை இரத்த கொடையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஒரு முக்கிய வேண்டுகோள்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரையில் முன்பெல்லாம் இரத்தம் தேவையென்றால் அனைவரும் அலைந்து திரிந்து போராடி கொடையாளரை கண்டுபிடிப்பது வழக்கம். முன்பு அதிரையில் கால்பந்தாட்ட தொடர்களின் போது வர்ணனை செய்துகொண்டிருக்கும் சமயத்தில் இரத்த தேவை குறித்த அறிவிப்பை கூறியது உண்டு. அந்த அளவிற்கு இரத்தத்திற்கான தேடலில் நாள்தோறும் யாராவது ஒருவர் ஈடுபட்டுக்கொண்டிருப்பர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அதிரையில் CBD என்ற இரத்த தான சேவை அமைப்பு துவங்கப்பட்டதை அடுத்து இரத்தம் என்பது இலகுவாக கிடைத்துவிடுகிறது. இது நமக்கு எளிதாக கிடைத்தாலும் அதற்காக அந்த இளைஞர்கள் படும் கஷ்டங்கள் ஏராளம். ஒவ்வொருவருடைய இரத்த வகையையும் கண்டறிந்து அதனை சேகரித்து தேவைப்படும்போது அவரவர்களுக்கு தொடர்புகொண்டு அழைத்து வருகின்றனர்.

அதிரையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான யூனிட் இரத்தத்தை தானமாக கிடைக்க செய்துள்ளனர். வாட்ஸ் அப் பயன்படுத்தும் நம்மில் பலருக்கும் இவர்கள் அனுப்பும் மேசேஜ் அடிக்கடி வரக்கூடும். அதனை பலர் கண்டுகொள்ளாமல் சென்று விடுகிறோம். ஆனால், இதன் அருமை நமக்கோ நமது குடும்பத்தினருக்கோ நேரும் போது தான் தெரியும். எனவே இவர்கள் அனுப்பு மெசேஜ்களை பார்த்து உங்களுக்கோ உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ அந்த இரத்த வகை இருந்தால் அதனை கிடைக்க செய்யுங்கள்.

அதுமட்டுமின்றி, அரசியல் கட்சித்தலைவர்களின் பிறந்தநாளின் போதும், அமைப்புகள் நடத்தும் இரத்ததான முகாம்களின் மூலமாகவும் எடுக்கப்படும் இரத்தம் இரத்த வங்கிகளில் வழங்கப்படுகின்றன. ஆனால், இதனை இரத்த வங்கிகள் காசாக ஆக்குகின்றன. இது மிகப்பெரிய காசு பார்க்கும் தொழிலாக உருவெடுத்து வருகின்றது. ஒருவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்பட்டாலும், இரத்த வங்கிகள் உடனடியாக இரத்தத்தை வழங்காமல் அதற்கான ஒரு டிமாண்டை உருவாக்கி, வேறு இரத்தத்தை பெற்றுக்கொண்டு இரத்தத்தை வழங்குகின்றனர். இதனால் அவர்கள் தேக்கி வைத்த 6 லட்சம் லிட்டர் இரத்தம் நாடு முழுவதும் வீணாகிவிட்டன. ஒருமுறை இரத்ததானம் செய்தவர் அடுத்த 3 மாதங்களுக்கு இரத்தம் கொடுக்க முடியாது என்பது நம்மில் பலருக்கு தெரியும். எனவே, இந்த இரத்ததான முகாம்களில் சராசரியாக நூறு நபர்கள் இரத்தம் வழங்கினால், அவர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இரத்தம் வழங்க தகுதியற்றவர்களாகி விடுகின்றனர்.

இதன்மூலம் ஊரில் உள்ள 100 இரத்த கொடையாளர்கள் குறைகின்றனர். அவசரத்துக்கு வழங்கப்படுவதான் இரத்தகொடையே தவிர, இதுபோன்று விளம்பரத்துக்காக நடத்தப்படும் முகாம்களில் இரத்ததானம் செய்வது கொடையாகாது. இதனை இரத்ததான முகாம் நடத்தும் கட்சிகளும், அமைப்புகளும், அதில் இரத்தம் வழங்கும் கொடையாளர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author