கண்பிறை நோய்க்கு குர்ஆன் வழியில் மருந்து கண்டுபிடிப்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.
சுவிஸ் மருந்துக்கம்பெனி, குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறைவசனங்களில் அடிப்படையில் கண்புரை நோய்விற்கு அறுவை சிக்கிசை இல்லாமல் ஒரு அற்புதமான மருந்தை உருவாக்குகிறார்கள்.
இது சம்மந்தமான செய்தி கத்தார்நாட்டின் அர்-ராயா என்ற செய்தித்தாளில் வந்த செய்தியாவது, எகிப்திய மருத்துவரான டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் மனிதனின் வேர்வை(Secretions of human Sweat Gland)யில் இருந்து 99சதவிதம் பயனுள்ள, எந்த பக்கவிளைவும் இல்லாத ஒரு குறிப்பிட்ட பொருளை எடுத்தார்.
பின்னர் அதை ஐரோப்பா மற்றும் அமெக்கா போன்ற நாட்டில் பதிவு செய்தார். அந்த குறிப்பிட்ட பொருளில் இருந்து சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் கண்களுக்கு தேவையான மருந்து தயாரிப்பில் ஈடுப்படுகிறார்கள்.
சூரா யூசுஃப் என்ற திருக்குர்ஆனின் அத்தியாயமே டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது அவர்கள் கண்புரை நோய்க்கு மருந்து உருவாக்க துண்டியது. அவர் கூறுகிறார், ஒரு நாள் காலை நேரத்தில் சூரா யூசுஃப் படித்துக் கொண்டு இருந்தேன், அச்சூராவின் 84 மற்றும் அடுத்து வரும் வசனங்கள் என் சிந்தனையை துண்டியது
“நீங்கள் என்னுடைய இந்தச்சட்டையைக் கொண்டு போய் என் தந்தை முகத்தில் போடுங்கள். (அதனால் உடனே) அவர் (இழந்த) பார்வையை அடைந்து விடுவார். பின்னர் நீங்கள் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவரையும் அழைத்துக் கொண்டு என்னிடம் வாருங்கள்” என்று கூறி அனுப்பினார். (அல்குர்ஆன் 12:93).
நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கவலையினாலும், வருத்தினாலும் கண்புரை நோய் வந்தது, பின்னர் நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சட்டையினால் யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பார்வை மீண்டும் கிடைத்தது. டாக்டர் இதற்கு என்ன காரணம் இருக்கும் என்ற ஆய்வில் இருந்த சமயத்தில் அவரின் சிந்தனைக்கு வந்த பொருள் தான் மனிதனின் வேர்வை. அவர் அதை சில சோதனை விலங்குகளில் ஆய்வு செய்தார்.
அது நேர் மறையான தாக்கங்கள் தந்ததின் அடிப்படையில்
250 கண்புரை நோயாளிகளுக்கு அம்மருந்தை தினத்தோறும் இருமுறை என இரண்டு வாரம் தந்தார்.அதில் அவருக்கு 99சதவிதம் வெற்றியை தந்தது.
அதன் பின் அவர் ஐரோப்பா மற்றும் அமெரிக்க போன்ற நாட்டில் உள்ள சில ஆய்வு நிருவனங்களுடன்(Medical
laboratory) மேலும் சில ஆய்வுகளை செய்து பின்னர் சுவிஸ் நாட்டை மையமாக கொண்ட மருந்து கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்தார்.
மேலும் அந்த மருந்தில் “Medicine of Quran” என்ற வாசகத்தை பதியவேண்டும் என்ற நிபந்தனையுடன் அதன் உரிமையை தந்துவிட்டார். அல்லாஹ் திருக்குர்ஆனில் மனித இனத்திற்கு அருமருந்தாக தந்துள்ளான். இதை தான் அல்லாஹ் கீழ்காணும் வசனத்தில் கூறுகிறான்;
”நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் அருமருந்தாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை.” (அல்குர்ஆன் 17:82).
அல்லாஹ் மிக அறிந்தவன்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author