சிங்கப்பூரில் நடைப்பெற்ற விவாதப்போட்டியில்- அதிரை மாணவன் சுஹைல் வெற்றி..!

சொற்சிலம்பம் 2017 என்ற பள்ளிகளுக்கு இடையிலான மாபெரும் விவாதப்போட்டி நடைபெற்றது. இதில்   ஆங்கிலோ சீன தன்னாட்சி “உலகத் தரத்திற்கு ஏற்ற வாழ்க்கைத் தரத்தைக் சிங்கப்பூர் கொண்டுள்ளதாக வாதிட்டது. அதே போன்று வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் இன்னும் உலகத் தரத்தை எட்டவில்லை’ என்ற தலைப்பில் ராஃபிள்ஸ் கல்வி நிலையம் வாதிட்டது. இந்த போட்டி மீடியா கார்ப்பின் ‘எம்இஎஸ்’ அரங்கில் நேரடியாக ஒளிபரப்பானது.

இதில் ‘வாழ்க்கைத் தரத்தில் சிங்கப்பூர் உலகத் தரத்தை எட்டிவிட்டது’ என்ற தலைப்பை பேசிய ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளி, சிங்கப்பூரில் கிடைக்கும் உணவு, உடை ஆகிய அடிப்படை வசதிகளைப் பட்டியலிட்டதுடன் வளங்கள் அற்ற சிங்கப்பூர் ஐம்பது ஆண்டுகளில் கண்ட பெரும் வளர்ச்சியை எடுத்துரைத்தது.

இதையடுத்து சிறப்பாக பேசிய ஆங்கிலோ சீன தன்னாட்சி பள்ளியை வெற்றியாளராக நடுவர்கள் அறிவித்தனர். இதில் வெற்றி பெற்ற ஆங்கிலோ சீன பள்ளி சார்பாக அதிரையை சேர்ந்த KSA.ஹாஜா ஷரீப் அவர்களது மகன் சுஹைல், ஹர்‌ஷிதா ஸ்ரீநிவாசன், ஷஃபானா அஃபிஃபா, சஹானா பாலசுப்ரமணியம், முகமது நவீத், ஆகியோர் இந்த பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றனர்.

அதிரை மாணவர் சுஹைலுக்கு அதிரை பிறை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close