தமிழகத்தில் கண்டுகொள்ளப்படாத இஸ்லாமிய விஞ்ஞானிகள்…!

இறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கும் ஆயிரம் வணக்கசாலிகளை விட சைத்தானுக்கு நுட்பறிவாய்ந்த ஒரு அறிஞர் மிகவும் கடினமானவர். (நபி மொழி- திர்மிதி)

யானை தன் பலம்அறியாது என்று சொல்லுவார்கள். மிகப்பெரும்பலம் கொண்ட யானையை மிகச்சிறிய சங்கிலியால் கட்டி கட்டுப்பாட்டில்வைத்திருப்பதை நாம் நடைமுறையில் காண்கிறோம். பலம் இல்லாத பால்யவயதில் மனரீதியாக பழக்கப்பட்டு விட்டதால் யானையும் தன் பலத்தை சோதித்துப் பார்ப்தில்லை (மதம் பிடிக்காத வரை). மிகப்பெரும் ஆற்றல் மிகுந்த இந்த சமுதாயமும் இன்றுவரை தன்பலத்தை உணராத நிலையில் தான் உள்ளது.

இந்தியாவில்.இஸ்லாமியர்கள் முன்னேறுவதை மற்றவர்கள் அங்கீகரிப்பதில்லை என்பது நமது பொதுவான குற்றச்சாட்டுகளில் ஒன்று. ஆற்றல்மிகு இஸ்லாமிய அறிஞர்களை அடுத்தவர்கள் அங்கீகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும், இன்றைய தினத்தில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைகழகங்களிலும் ஒருசில கல்லூரிகளிலும் தங்களின் அற்புமான ஆராய்சிகள் மூலம் உலக ஆராய்சியாளர்களைதிரும்பிப் பார்க்கவைத்துக்கொண்டிருக்கிறார்கள் பல தமிழக முஸ்லீம் விஞ்ஞானிகள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.???

இது வரை இவர்களை அடையாளம் கண்டிருக்கிறோமா?

அல்லது இவர்களின் அறிவியல் சாதனைகளை குறைந்தது நம்மவர்களுக்காகவாவது அறிமுகப்படுத்தி அங்கீகரித்திருக்கிறோமா…?

1)மண்புழு என்ற அற்பஉயிரியை அற்புத உயிரியாக்கி இயற்கை உரம் உருவாக்கி வரும் டாக்டர். ‘சுல்தான்அஹமது இஸ்மாயில்’(சென்னை புதுக்கல்லூரி)

 

2)பாசுமதி அரிசி மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி ‘பத்மஸ்ரீ சித்தீக்’ (இளையான்குடி),

3)புற்றுநோய் ஆராய்சியில் திருப்புமுனை கண்ட ‘அக்பாஷா’ (பாரதிதாசன் பல்கலைக்கழகம்-திருச்சி),

4)நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த ‘தாஜூதீன’; (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,-திருச்சி),

5)ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் ‘அஜ்மல்கான்’(அண்ணாமலை பல்கலைக்கழகம்-)

6)சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்),

7)பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த ‘ஹூசைன் முனைவர்’ (மதுரை காமராஜர் பல்கலைகழகம்),

8)மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த ‘அப்பாஸி’ (பாண்டிச்சேரி பல்கலைகழகம்),

9)மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த ‘முகமது அனீபா’ (புனித சேவியர்கல்லூரி – பாளையங்கோட்டை) உள்ளிட்ட இன்னும் பல்வேறு அறிவியல் விஞ்ஞானிகளும் பல பொருளாதார நிபுணர்களும் , இலக்கிய அறிஞர்களும் வெளிச்சத்திற்குவராமலேயே உள்ளனர்.சிறிய செயலுக்காக பெரிய அளவில் விளம்பரப் படுத்தும் நம்மவர்கள் , பெரிய அளவில் கல்விச் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் இவர்களை குறைந்தது தமிழக முஸ்லீம் சமுதாயத்திற்குக்கூட அறிமுகப்படுத்திஆவணப்படுத்தவில்லையே என்பதும் மிகப்பெரிய ஆதங்கமாக உள்ளது.

சமகாலத்தில்,நம்மிடையேயும் ஆற்றல்மிகு அறிவியல் அறிஞர்கள் உள்ளார்கள் அவர்களும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை நம்மவர்களுக்கும் தெரியவேண்டும்.

இது நமது சமுதாய இளைஞர்கள் மனதில் புரையோடியிருக்கும் கல்வி சார்ந்த தாழ்வு மனப்பான்மை வேரறுக்கும். யானைக்கு கட்டபட்ட சங்கிலி போன்று நமது சமுதாயத்தின் மீதும் சுற்றப்பட்டிருக்கும் கல்வியற்ற சங்கிலியும் தகர்ந்து போக வாய்ப்புள்ளது.

வளர்ந்து வரும் பள்ளப்பட்டி இளம் விஞ்ஞானி சாரூக் ரிஃபாத் மற்றும் மேற்சொன்ன அனைத்து விஞ்ஞானிகளையும் இன்னும் கண்ணுக்குத்தெரியாத சமுதாய விஞ்ஞானினளை அனைவரையும் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் பிரம்மாண்ட பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து அனைவரையும் கண்ணியப்படுத்த வேண்டும்.

Close