அதிரை EASTERN SPORTS CLUB அணியினரின் நன்றி அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும்.

22,23 -4 – 2017ம் ஆண்டிர்கான EASTERN SPORTS CLUB (ESC) நடத்திய மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி அல்லாஹ்வின் உதவியால் மாபெரும் வெற்றி தொடராக அனைவரின் உதவியோடு நடத்தி முடிக்கப்பட்டது.

எங்களுடைய கைப்பந்து தொடர் போட்டி இவ்வளவிற்கு சிறப்பாக அமைந்திட எங்களுக்கு பரிசுகளை வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும், ஆதரவளித்த காவல்துறையினருக்கும், அனைவருக்கும் தெரியப்படுத்திய அதிரை இணையதளங்களுக்கும், போட்டியில் கலந்துகொண்ட விளையாட்டு அணிகளுக்கும், திரளாக கலந்துகொண்டு பார்வையிட்ட ரசிகர்களுக்கும், இதர செலவினங்களுக்காக அன்பளிப்பு தொகை வழங்கிய அனைவருக்கும் இந்நேரத்தில் Eastern Sports Club சார்பாக மனமார்ந்த நன்றியையும் சலாத்தினையும் தெரிவித்து கொள்கிறோம்.

மேலும் இவ்வெற்றித் தொடர் வருடந்தோறும் இனி வரும் காலங்களில் சிறப்பாக தொடர உங்களுடைய ஆதரவையும் பங்களிப்பையும் மென்மேலும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இங்ஙனம்.,
Eastern Sports Club (ESC) நண்பர்கள்,
கீழத்தெரு, அதிரை.

Close