செருப்பு சின்னம் கேட்டு சண்டைபோட்ட வேட்பாளர்கள்

இன்று தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில் போட்டிபோடும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியலையும் அவர்களுக்கான சின்னங்களையும் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. இதில் சுயேட்சை மற்றும் தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்படாத வேட்பாளர்களுக்கு இன்று சின்னங்கள் அறிவிக்கப்பட்டது.
இதில் வழக்கமாக வழங்கப்படுகின்ற 87 சின்னங்களை தவிரத்து புதிதாக செருப்பு, பச்சை மிளகாய், பேனா நுனி ஆகிய 3 சின்னங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. 
இதில் பல சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு செருப்பு சின்னத்தை போட்டிபோட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது.  இறுதியாக குழுக்கல் முறையில் அந்த சின்னம் மத்திய சென்னை வேட்பாளருக்கு கிடைத்தது. 
 ஆம் ஆத்மி கட்சி துடைப்பம் சின்னத்தை வைத்து சாதித்தது போல் இவர்கள் செருப்பு சின்னதை வைத்து வெற்றி பெற நினைத்தார்களோ என்னவோ!

ஆக்கம்: அதிரை பிறை  
Close