அதிரையில் வளம் வரும் FAN AUTO! இது சம்மர் ஸ்பெஷல்!

அதிரை நடுத்தெரு கீழ்ப்றத்தை சேர்ந்தவர் சகாபுத்தீன்.  தக்வா பள்ளி மனிதநேய ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தை சேர்ந்த இவர் அதிரையில் வெயில் 100 டிகிரிக்கும் அதிகமாக அடிப்பதால் பயணிகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிறிய அளவிலான FAN ஒன்றை ஆட்டோவில் பொறுத்தியுள்ளார். தன் ஆட்டோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயன்பெறும் அவர்கள் வரும் போது பேனை அவர்களுக்கு இயக்குகிறார். இதனால் கடுமையான வெயிலில் இவரது ஆட்டோவில் ஏறும் பயணிகள் உடலுடன் சேர்ந்து உள்ளமும் குளிர்ந்து  செல்கின்றனர்.

படங்கள்: வஹா சலீம்

Close