அதிரையில் நடைபெறும் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

தற்போது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணவர்கள் உயர்கல்வி குறித்த யோசனையிலும், அதற்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், அவர்களுக்கு உயர்கல்வி குறித்த தெளிவை ஏற்படுத்தும் வகையில் அதிரை ஏ.எல் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 03-05-2017 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதில் சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் ஹாஜாகனி மற்றும் பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரியின் தமிழ்துறை தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து தெளிவுபடுத்த உள்ளனர். இதில் அனைவரும் கலந்துகொண்டு பயனடைந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close