சம்பைபட்டினத்தில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் அதிரை ABCC அணி 3-ஆம் பரிசை தட்டிச்சென்றது…!

அதிரையை அடுத்துள்ள சம்பைப்பட்டினத்தில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிரை ABCC அணி முதல் சுற்றில் கட்டுமாவடி அணியையும், இரண்டாவது சுற்றில் மல்லிப்பட்டினம் அணியையும் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. இதையடுத்து நடைபெற்ற காலிறுதிப்போட்டியில் சம்பைப்பட்டினம் அணியை எதிர்கொண்ட அதிரை ABCC அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் அந்த அணி செந்தலை அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து ABCC அணிக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது. இந்த தொடரில் முதல் பரிசை செந்தலை அணியும், இரண்டாவது பரிசை சம்பை அணியும், நான்காவது பரிசை PFCC அணியினரும் கைப்பற்றினர்.

இதில் மூன்றாவது பரிசை தட்டிச்சென்ற அதிரை ABCC அணி இனி வரும் ஆட்டங்களில் தொடர் வெற்றிகளை குவிக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close