ஆண்டிராய்டு இயங்குதளத்தில் தொலைக்காட்சி கூகுள் முயற்சி

தொழிநுட்பத்தில் முன்னோடிகளான கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் ஏற்பட்ட தொழில் போட்டிகளினால் நித்தமும் பல புதிய கண்டுபிடிப்புகளை மக்களுக்கு அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.அந்த வகையில், ‘ஆண்டிராய்டு’ (Android) மூலம் செல்பேசிகளில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய கூகுள், தற்போது அதனை தொலைக்காட்சிப் பெட்டியில் புகுத்த இருக்கிறது.இது பற்றி கூகுள் வட்டாரங்களில் கசிந்த தகவலின் அடிப்படையில் கூறப்படுவதாவது:-அமேசான் நிறுவனத்தின் Fire Tv க்கு போட்டியாக உருவாக இருக்கும், கூகுளின் Android TV, பல புதிய அம்சங்களைக் கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செட் ஆப் பாக்ஸ் (Set of Box) வசதி உடன் வர இருக்கும் இந்த Android TV தொடுதிரை  மூலமாகவும், ரிமோட் கருவி மூலமாகவும் இயக்க முடியும்.இதன் ரிமோட் கருவியானது, சாதாரண ஒன்றைப் போல் இல்லாமல் பயனாளர்களின் ஒலித்துணுக்குகள் வழியாக இயங்க இருக்கிறது. மேலும் இந்த Android TV- ல், இணையதளத்தையும், திறன் பேசிகள் போன்று பல செயலிகளையும் மிக எளிதாக செயல்படுத்த முடியும் என கூறப்படுகிறது.ஏற்கனவே ‘Chrome cast platform’ வழியாக  தொலைக்காட்சிப் பெட்டியில் தொழில்நுட்ப புரட்சிக்கு வித்திட்ட கூகுள் நிறுவனம், தற்போது தனது அடுத்த பிரம்மாண்டத்தை நோக்கி பயணிக்க இருக்கிறது.

Close