பெண் விஞ்ஞானிக்கான UGC நேர்காணலில் தேர்வான பரங்கிப்பேட்டை அஸ்மத்துன்னிஸா…!

கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையை சேர்ந்த “மகள் டெக்ஸ்டைல்ஸ்” நபிகான் அவர்களின் மகளார் செல்வி. முனைவர் அஸ்மத்துன்னிசா Msc., M.Phil., PhD அவர்கள் தனது உயர்கல்வி படிப்பில் தங்க பதக்கம் பெற்று சாதித்தவர். தற்போது தில்லியின் பல்கலைக்கழக மானிய கமிஷன் University Grants Commission (UGC) நடத்திய நேர்காணலில் கலந்துக்கொண்டு பெண் விஞ்ஞானி (Women Scientist) படிப்பிற்கு தேர்வாகி உள்ளார்கள்.

இந்தியா முழுவதும் 1220 பேர்களிலிருந்து தேர்வு செய்யப்பட 89 நபர்களில் அன்னாரும் ஒருவர்.

தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட 8 பேர்களில் இவரும் ஒருவர். ஒரு சிறிய நகரிலிருந்து சென்று, இந்தியக் கல்விநிலைகளின் உயர் பரிமாணங்களை தொட்டு சாதித்திருக்கும் நமது சகோதரிக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

 

Close