அதிரையில் சிறப்பாக தொடங்கிய “அமைதியை நோக்கி” வாழ்வியல் கண்காட்சி நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரையில் இன்று அமைதியை நோக்கி என்ற வாழ்வியல் கண்காட்சி துவங்கியுள்ளது. இந்த கண்காட்சி வரும் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் சேர்மன் வாடியில் உள்ள பழைய தனலெட்சுமி வங்கி இடத்தில் நடைபெறுகிறது.

இதில் நவீன விஞ்ஞானம், மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கை, பெண்ணுரிமை, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், மனித படைப்பு, புத்தகங்கள், வீடியோ அரங்கம் ஆகியவை நடைபெறவுள்ளன. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இந்த கண்காட்சிக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைக்கப்ப்ட்டு அதில் வாழ்வியல் குறித்த பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இந்த விடுமுறை காலங்களில் இதனை ஒரு வாய்ப்பாக கருதி இந்த கண்காட்சிக்கு சென்று வாழ்வியல் குறித்த விளக்கத்தை பெற்றுகொள்ளலாம்.

Close