தஞ்சையில் ஆம் ஆத்மிக்கு இடமில்லை அதிர்ஷ்டம்

ஆம் ஆத்மி கட்சி சார்பாக தஞ்சை தொகுதில் போட்டியிடும் வேட்பாளராக திரு.பழனிராஜன் அவர்கள் நிறுத்தப்பட்டார். இவர் கடந்த ஏப்ரல் 4ம் தேதி வேட்புனுவைத் தாக்கல் செய்தார். நேற்று நடைப்பெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது இவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த தி.மு.க , ஆ.தி.மு.க போன்ற கட்சிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்த  மாற்று வேட்பாளர்  ஒருவருக்கும் சேர்த்து வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். ஒரு வேலை வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் மாற்று வேட்பாளர் அந்த கட்சி சார்பாக அந்த தொகுதியில் போட்டியிடுவார். வேட்புமனு நிராகரிக்கப்படவில்லை என்றால் மாற்று வேட்பாளர் வேட்புமனுவை வாபஸ் பெற்றுவிடுவார். இது நடைமுறை.
இந்தமுறையை ஆம் ஆத்மி கட்சி செய்திருந்தால் திரு. பழனிராஜன் அவர்களது வேட்புமனு தள்ளுபடி செய்யபட்டாலும் அக்கட்சியின்  மாற்று வேட்பாளர் களத்தில் இருக்கலாம். ஆனால் ஆம் ஆத்மி கட்சி தஞ்சையில் மாற்று வேட்பாளரை நிறுத்த தவிறிவிட்டது. இதனால் இந்த முறை நம் தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிட முடியாது.
ஒரு மாற்றத்தை தேடி இந்த முறை திராவிட கட்சிகள், காங்கிரஸ், பி.ஜே.பியை தவிர்த்து ஆம் ஆத்மிக்கு வாக்களிக்கலாம் என்று எண்ணிய தஞ்சை தொகுதி வாக்காளர்கள்  சிலர் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆக்கம்: அதிரை பிறை 
Close