அதிரை பேருந்து நிலையம் அருகே வாகன நெரிசலை ஏற்படுத்தும் பேருந்துகள்!

அதிரை பேருந்து நிலையத்திலிருந்து ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பல ஊர்களுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. அதற்கு ஏற்ற வகையில் பேருந்து நிலையம் விரிவாக அமைக்கப்பட்டாலும் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிற்காமல் மெயின் ரோட்டில் நிற்கின்றன. குறிப்பாக பட்டுக்கோட்டை வழியாக செல்லும் பல பேருந்துகள் 10 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பாக இந்த பேருந்துகள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. அதே போல் முத்துப்பேட்டை செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையத்தை எட்டிக்கூட பார்க்கப்பது இல்லை. இதனால் வாகன நெரிசல் இங்கு அடிக்கடி ஏற்படுகிறது. இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு பேருந்து ஓட்டுனர்களுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே அதிரை மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

ச்

Close